ANS Media
ANS Media
முக்கிய செய்திகள்
ANS Media செய்தித் தளத்திற்கு வரவேற்கிறோம்! உடனுக்குடன் உண்மை செய்திகளை தமிழில் பெற எங்களைப் பின்தொடருங்கள்.

முதல்வர் விஜய் முதல் வெளிநாட்டு பயணம் .தனி விமானம் இல்லை - சாதாரண பயணிகளுடன் லண்டன் புறப்பட்டார்!

வெளியீடு: September 11, 2026 | எழுதியவர்:
முதல்வர் பொறுப்பேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டு பயணமாக தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் லண்டனுக்கு புறப்பட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

நேற்று இரவு செப்டம்பர் 10 ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 10.05 மணிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் புறப்பட்ட அவர், துபாய் வழியாக இன்று செப்டம்பர் 11 ஆம் தேதி காலை லண்டனை சென்றடைந்துள்ளார். இது வழக்கமான முதல்வர்களின் பயணத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

காரணம், பொதுவாக முதல்வர்கள் தனி சிறப்பு விமானத்தில் செல்வது வழக்கம். ஆனால் முதல்வர் விஜய் சாதாரண பயணிகளுடன் வணிக விமானத்தில் பயணம் செய்துள்ளார். அதுமட்டுமல்ல, சென்னை விமான நிலையத்தில் விஐபிக்களுக்கான 6-வது வாயில் வழியாக செல்லாமல், சாதாரண பயணிகள் பயன்படுத்தும் T2 முனையம் வழியாகவே உள்ளே சென்றுள்ளார். அவருடன் வரும் ஆலோசகர் விஷ்ணு ரெட்டிக்கு விமான நிலைய பாதுகாப்பு பிரிவு அனுமதி மறுத்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்த பயணத்தின் போது முதல்வர் விஜய் லண்டனில் பல முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார். பிரிட்டனை சேர்ந்த முன்னணி நிறுவனங்களுடன் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மேலும் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

குறிப்பாக மின்சார வாகன உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் போன்ற துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது. ஏற்கனவே வெற்றி தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில் சுமார் 1 லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடி ரூபாய்க்கு 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ள நிலையில், இந்த லண்டன் பயணம் அதனை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, பிரிட்டனின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மைதானத்தில் நடைபெறும் மிச்செலின் லெ மான்ஸ் கோப்பை பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாகவும், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைப்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.

இந்த பயணத்தை முன்னிட்டு தமிழக அரசின் முக்கிய திட்டமான தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் தொடக்க விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் இந்த திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் விஜய் செப்டம்பர் 16 ஆம் தேதி வரை லண்டனில் தங்கியிருந்து விட்டு, மீண்டும் துபாய் வழியாக எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை திரும்புகிறார். செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 8 மணிக்கு அவர் சென்னை வருவார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது மாதிரியான சுவாரஸ்யமான தகவல்களை பெற நமது பக்கத்தை பின்தொடருங்கள் 

Tamil Nadu CM C Joseph Vijay embarks on his first official foreign visit to London via Dubai on a commercial Emirates flight. The visit from Sep 10 to Sep 16 aims to attract new foreign investments, sign MoUs with UK companies, and explore motor sports infrastructure at Silverstone. This marks a departure from VIP protocol as CM Vijay used the regular T2 terminal at Chennai Airport.

Tamil Nadu CM Vijay London Visit, Vijay First Foreign Trip London, CM Vijay Emirates Flight Dubai, Tamil Nadu Investment MoU London, Vijay London Trip News in Tamil, Silverstone Michelin Le Mans Cup Vijay